‘தேவி-2:’ மீண்டும் இணையும் பிரபுதேவா – விஜய் கூட்டணி!

பிரபல நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவாவுடன் இயக்குனர் விஜய் மீண்டும் இணைந்து ‘தேவி-2’ என்ற படத்தில் பணியாற்ற உள்ளனர்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய காமெடி படமான தேவி என்ற  படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் சோனு சூட், ஆர்.ஜே. பாலாஜி, ஆர்.வி.உதயகுமார், சதீஷ், நாசர், சஞ்சய் பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.  இந்த படம் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய 3 மொழிகளிலும் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது.

அதைத்தொடர்ந்து, மீண்டும் நடிப்பில் இறங்கி உள்ள பிரபுதேவா, யங் மங் சங், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தபாங் என்ற இந்திப் படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

தேவி’ படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ‘லட்சுமி’ என்ற படத்தில் நடித்துள்ளளார் பிரபுதேவா. நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா, சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லட்சுமிமி’ படத்தை வருகிற நவம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில்,   பிரபுதேவா – விஜய் கூட்டணி ‘தேவி 2’ படத்துக்காக மீண்டும் இணைகிறது.

இந்த படத்தின் கதை ஏற்கனவே வெளியான  தேவி படத்தின் தொடர்ச்சியா அல்லது வேறு கதையா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Devi-2:' Prabhu Deva re-joins Vijay Alliance!, 'தேவி-2:' மீண்டும் இணையும் பிரபுதேவா - விஜய் கூட்டணி!
-=-