ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

லண்டன் :

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகித்த பிரிட்டன் கடந்த ஆண்டு அதில் இருந்து வெளியேற பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது.

கடந்த ஆண்டு ஜூன் 23ம் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் பிரிட்டன் மக்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.  இதன்பின்னர் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார்.

இந்நிலையில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பிரபுக்கள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டதிருத்தங்கள் கீழவையால் நிராகரிக்கப்பட்டன. இதனால் ஐரோப்பிய யூனியன் தாக்கல் செய்த சட்ட திருத்த மசோதாவில் எந்த திருத்தமும் இல்லாமல்  கீழவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனால் மக்கள் விருப்பப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்ததும் அது சட்டமாக்கப்படும்.