சென்னை பிரசாத் லேபில் நடந்த ஹாலிவுட் இசைவெளியீட்டு விழா…..!

அமெரிக்கவாழ் இந்தியரான டெல் கே.கணேசன், கய்பா பிலிஸ் (Kyyba Films) சார்பில் ’கிரிஸ்துமஸ் கூப்பன்’ (Christmas Coupon) மற்றும் ‘டெவில்ஸ் நைட்’ (Devil’s Night) ஆகிய ஹாலிவுட் படங்களை தயாரிக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் தமிழ் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹாரர், பேண்டஸி, த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் நைட்’ (Devil’s Night) படத்தை சாம் லோகன் கலெகி (Sam Logan Khaleghi) இயக்கியிருக்கிறார். கைபா பிலிம்ஸ் சார்பில் டெல்.கே.கணேசன், ஜி.பி.திமோதியோஸ் (G.B.Thimotheose) ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மோசன் பிக்சர் மற்றும் ஆடியோவையும் சென்னையில் பிரசாத் லேபில் வெளியிட்டுள்ளனர்.

‘டெவில்ஸ் நைட்’ (Devil’s Night) படத்தில் நடித்திருக்கும் பிரபல ஹாலிவுட் மாடல் ஷலினா குஷ்மானோ (Shalina Gusmano), படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் டி.கணேசன், பிரபல ஹாலிவுட் ராப் பாடகர் ஸ்விட்டி மெக்வேய் (Swifty Mcvay) ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி