ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ.39 லட்சத்தில் தங்க விளக்கு நன்கொடை

ஷீரடி:

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான தங்க பஞ்ச முக விளக்கை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார்.

1,351 கிராம் எடை கொண்ட விளக்கை மும்பையை சேர்ந்த ஜெயந்திபாய் என்ற பக்தர் வழங்கியதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘‘3 நாள் கொண்ட ராம நவமி திருவிழாவின் தொடக்க நாள் அன்று இந்த விளக்கு வழங்கப்பட்டது. இந்த பஞ்சார்த்தி விளக்கு பூஜைகளின் போது பயன்படுத்தப்படும்’’ என்று ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ரூபல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி