திருமலை: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக,  திருப்பதியில் இன்று முதல் 28ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சில மாதங்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளுடன்  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  முதல்லி, தினசரி ஆயிரம் பேர் என தொடங்கி நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது,  தினர் 50ஆயிரம் க்தர்கள் வரை திருப்பதியில் (Tirupati) சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, திருப்பதியில் தற்போது தெப்பத்திருவிழா தொடங்கி உள்ளதால், மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனப்டி, இன்றுமுதல்  இன்று முதல் (25.03.21) வருகிற 28ஆம் தேதி வரை திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) அறிவித்துள்ளது.