மும்பை:

மும்பை லால்பக் பகுதியில் புகழ்பெற்ற லால்பவுச்சா ராஜா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆண் டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இங்கு 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்.

பெரும் விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் காணிக்கையும் அதிகளவில் பக்தர்களால் செலுத்தப்படும். இந்த வகையில் திருவிழா முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது. காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளியும் பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது.

தற்போது வரை ரூ.5.8 கோடி ரொக்கம், 5.5 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி ஆகியவை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது. இதில் ரொக்கத்தில் மட்டும் ரூ.1.10 லட்சத்துக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது.

தொடர்ந்து காணிக்கை எண்ணும் பணி நடந்து வருகிறது. காணிக்கையாக செலுத்தப்பட்ட இதர பொருட்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ரூ. 8 கோடி வரை காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு திருவிழா நாட்களில் அதிக மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் காணிக்கை குறை ந்துள்ளது என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.