நேபாளத்தில் வானிலை மோசம்….தமிழக பக்தர்கள் தவிப்பு

காத்மண்டு:

நேபாள நாட்டிற்கு இந்தியர்கள் பலர் கைலாஷ் யாத்திரை மேற்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் அதிகம் செல்வார்கள். இந்த ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்றனர். தற்போது அங்கு வானிலை மோசமான நிலையில் உள்ளது.

இதனால் யாத்திரை சென்ற 1,300 பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹில்சா நகரில் பக்தர்கள் தவித்து வருகின்றனர். தமிழக பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.