தேவதாசி முறையை ஆதரித்த பக்தர்களும்…  எதிர்த்து ஒழித்த பகுத்தறிவுவாதிகளும்!

 

ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம நண்பன், கோவாலு போன் பண்ணான்.  “எங்கடா இருக்கே..”னு கேட்டான். “கழுதை எங்க போவேன்.. ஆபீஸ்லதான்”னு சொன்னேன்.

“சாயந்திரம் ஆறு மணிக்கு வாறேன்.. அப்படியே கெளம்பி பீச் சைடு போலாம்”னு சொல்லிட்டு வச்சுட்டான்.

அவன் அப்படித்தான்.

சரியா ஆறு மணிக்கு இன்னோவால வந்தான்.

கிழக்கு கடற்கரை சாலையில  வழக்கத்தவிட அதிக டிராஃபிக்.

அவன் நண்பன் ஒருத்தன், அயர்லாந்து போயிருந்தானாம்.  அங்கே ரொம்ப பிரபலமான “ஜெமிசன்” சரக்கு வாங்கியாந்தானாம்.

இந்த மாதிரி நேரத்துல என்னை மட்டும்தான் நம்ப நண்பன் அழைச்சுட்டுப்போவான்.

நான் ஏதாவது பழரசம் குடிக்க.. அவன் சரக்குல மூழ்குவான். திரும்பிப்போறப்ப நான் வண்டிய பத்திரமா ஓட்டிப்போயி, அவன் வீட்டுல விடணும்.

அப்புறம் அவன்  அலுவலக கதைய பேசிட்டே வண்டிய ஓட்டினான்.

வி.ஜி.பி. தாண்டி வழக்கமான இடத்துல. கடற்கரையை ஒட்டி, வண்டிய நிறுத்தினான்.

அவனுக்க சரக்கு, எனக்கு பழரசம்… ரெண்டு பேருக்கும் சைட் டிஷ்… (பழரசத்துக்கு சைட் டிஷ் வச்சு குடிக்கிற நல்ல பையன் நானு! எல்லாத்தையும் வழக்கம்போல ரெண்டு பையில போட்டு வச்சிருந்தான்.

அதை ஆளுக்கொரு பையா எடுத்துக்கிட்டு பேசிக்கிட்டே கடற்கரை ஓரத்துக்குப்போனோம். அவன் ஒரு கிளாசை எடுத்து தன்னோட வேலையை ஆரம்பிக்க.. நான் பழச்சாறை அப்படியே கவுத்தேன். 

கொஞ்ச நேரத்துல, “வைரமுத்து பண்ணது ரொம்ப தப்புல்ல” அப்படின்னான்.

“ஆமாண்டா.. ஏகத்துக்கு கடன் வாங்குறான். போன வாரம்கூட, என்கிட்ட வந்து ஐநூறு இருந்தா கொடேன்”னு கைமாத்து கேட்டான்” அப்படின்னு சொன்னேன்.

கோவாலு என்னை முறைச்சுப்பார்த்துட்டு, “கொஞ்சமாச்சும் வெளியுலகத்துக்கு வாடா”ன்னான்.

“வந்துட்டேன்.. வந்துட்டேன்.. ஆண்டாள் விவகாரத்துல  பல பேருகிட்ட திட்டு வாங்கி இப்போ மன்னிப்பு கேட்டிருக்கிறாரே…. அவருதானே..” அப்படின்னேன்.

“ஆமா.. ஆமா! எப்படிடா அப்படிச் சொன்னாரு அவரு? ரொம்பத் தப்பு!” அப்படின்னு கோவத்தோட சொன்னான் கோவாலு.

“அந்தக் கட்டுரையை படிச்சியா?”

“அந்த கண்றாவிய படிக்கவேற செய்யணுமா?”

”முதல்ல எந்த விசயத்தையும் படிக்காம.. தெரியாம பேசக்கூடாது. அந்தக் கட்டுரை முழுக்க ஆண்டாளைப் பத்தி உயர்வாத்தான் பல தரவுகளோட சொல்லியிருக்காரு. அதே நேரம், மெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் சுபாஷ் மாலிக் வெளியிட்ட Indian Movements Sum Aspects of disserts Protest and reforms என்ற நூலில்.ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம்னு குறிப்பிட்டிருக்கிறதையும் சொல்லியிருக்காரு..” என்றேன்.

“ஓ…”

“ஆமாண்டா..  ஆனா வைரமுத்துவே அப்படிச் சொன்னதா நினைச்சு ஆளாளுக்கு திட்ட.. அவரும் மன்னிப்பு கேட்டுட்டாரு! சரி, உனக்கு என்ன ஆதங்கம்?

வைரமுத்து

ஆன்மிகப் பெண்மணியை.. இல்லே.. கடவுள்னே வச்சுக்குவோம்.. ஆண்டாளை தேவதாசி அப்படின்னு ஒரு ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதினதை வைரமுத்து குறிப்பிட்டதுக்கு இவ்வளவு ஆவேசப்படுறியே… மதத்தை இழிவு படுத்திட்டாங்க அப்படிங்கிறதுதான் அந்த பக்தர்களோட பீலிங்..  அதேதானே உனக்கு?”

“ஆமாம்.. ஆமாம்..!”

“ஆனா.. தேவதாசி முறையை ரொம்ப புனிதமானதுன்னு நம்பினவங்களும் இதே பக்தர்கள்தான். தேவதாசி முறை தொடரும்னு போராடுனவங்களும் இதே பக்தர்கள்தான். தெரியுமா உனக்கு?”

“ அப்படியா..?”

“ஆமாம்… அது மட்டுமில்லை..  தேவதாசி முறையை எதிர்த்து ஒழிச்சது கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்கள்..”

சத்தியமூர்த்தி

“என்னடா சொல்ற..”

“கேளுடா..முதல்ல தேவதாசிங்ன்னா யாருன்னு தெரிஞ்சுக்கோ..! 1901ம் வருசம் எடுத்த  மக்கள் தொகைக் கணக்கெடுப்புல, தேவதாசி குலம் பத்தி விளக்கம் இருக்கு. அதாவது, “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் – பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்”  அப்படிங்குது அந்த விளக்கம்!”

“ஓ..”

“சின்ன சின்ன பெண் பிள்ளைங்களைக்கூட பொட்டு கட்டி கோயிலுக்குன்னு விட்ருவாங்க. அவங்க படாதபாடுபட்டாங்க. ஆடல், பாடல் கலைவளர்த்தாங்க அப்படின்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டாலும்.. ஜமீன்தார், பெரும் பணக்காரங்க, உயர் அதிகாரிங்க உடல் ஆசையைத் தீர்த்துக்கத்தான் அவங்க முக்கியமா பயன்பட்டாங்க. ரொம்ப துயரமான வாழ்க்கை!”

“அப்படியா..”

முத்துலட்சுமி ரெட்டி

“ஆமாம்… வெள்ளக்காரன் காலத்துல பெங்களூருல நடந்தது ஒரு விசயம். அங்க நீதிபதியா இருந்த ஒருத்தரு.. நம்ம ஆளுதான்… வழக்கமா தன்னோட ஆபீஸ் வண்டியில ஒரு குறிப்பிட்ட தேவதாசி வீட்டுக்குப் போய் வருவாரு. இது ஊருக்கே தெரியும்.

ஆனா அப்போ இது சகஜமான விசயம். ஆனாலும் வெள்ளக்கார அரசு, உங்க இஸ்டத்துக்கு எங்க வேணாலும் போங்க.. ஆனா அரசாங்க  வாகனத்துல அங்கே போகாதீங்கன்னு சொல்லுச்சு! அந்த அளவுக்கு  தேவதாசி முறை வெளிப்படையா இருந்துச்சு!”

“அப்படியா..”

“ஆமாண்டா..! அதே நேரத்துல இந்த கொடுமையான தேவதாசி முறைக்கு எதிரா அப்பவே சில பேரு குரல் எழுப்பினாங்க. ஆனா இதை ஆதரிச்சி பல பேரு பேசினவங்களும் உண்டு. அவங்க எல்லாரும் இந்து மத்ததுல  தீவிர பற்றான ஆளுங்க.. அதனால வெள்ளைக்கார அரசு, “இந்த தேவதாசி முறையை எதிர்த்து சட்டம்போட்டா, மத விவகாரத்துல தலையிடறதா பிரச்சினை வந்துருமோ”னு பயந்து போயி விட்ருச்சு!”

“ஓ…..”

“ஆமா..! இதுக்கான சட்டமன்ற குறிப்பே இருக்கு. தேவதாசிமுறையை ஒழிக்கணும்னு போராடினவங்கள்ல குறிப்பிடத்தகுந்த பெண்கள் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மாள்.

இவங்கள்ல முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரா இருந்தாங்க.  1920கள்ல, சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டமுன்வடிவ கொண்டு வந்தாங்க.

அப்போதைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், இதை தீவிரமா எதிர்த்தாரு. அதி தீவிர பக்திமானான அவரு, “தேவதாசிகள், ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவங்க. அவங்களுக்குன்னு புனிதத்தன்மை இருக்கு.   இந்து மத்ததோட ஒரு அங்கம்தான் தேவதாசி முறை” அப்படின்னு எல்லாம் பேசினாரு..!

அதுக்கு முத்துலட்சுமி ரெட்டி, “புனிதமான வாழ்க்கை அப்படின்னா, உங்க குடும்பத்து பெண்களை தேவதாசிகளாக்குங்களேன்”னு பதிலடி கொடுத்தார். அதோட தீரர் கப் சிப் ஆயிட்டாரு”

மூவலூர் ராமாமிர்தம்

“அட….”

“ஆக.. இன்னைக்கு பக்தர்கள் பலரும் தேவதாசி அப்படின்னா கேவலம்னு சொல்றாங்களே… கேவலம்தான். ஆனா இதை உயர்த்தி பிடிச்சதும் பக்தர்கள்தான். இந்த கேவல முறையை ஒழிச்சது பகுத்தறிவாதிகள்”

“அருமைடா..  எப்படி இவ்ளோ விசயம் தெரிஞ்சி வச்சிருக்கே..”

“கூமுட்ட..! கையிலதான் போன் வச்சிருக்கியே.. கூகுள்ல தேவதாசின்னு போடு எல்லா வரலாற்று தகவலும் வரும். இன்னும் பலது தெரிஞ்சிக்களாம் ” – நான் சொல்லி முடிச்சேன்.

 

 

கார்ட்டூன் கேலரி