சிஏஏ எதிர்ப்பு போராட்டம் கண்காணிப்பு பணியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு அதிகாரி! மிரட்டுகிறதா தமிழகஅரசு?

சென்னை:

குடியரசு திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கண்காணிப்பு பணியில் 6 காவல்துறை அதிகாரிகளை தமிழக டிஜிபி நியமனம் செய்து உள்ளார். இதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரண மான அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தும், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.  மாவட்டங்கள்தோறும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல இடங்களில் பரபரப்பும், பதற்றமும் நீடித்து வருகிறது..

இந்த நிலையில், போராட்டக்காரர்களைக் கண்காணிக்கும் வகையில், தமிழக டிஜிபி 6 காவல்துறை உயர் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார். இவர்களில் ஒருவர் எஸ்.பி. மகேந்திரன். இவர்தான் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, துப்பாக்கிசூடு நடத்தியவர். 14 உயிர்களை  கொன்று குவித்த எஸ்பி மகேந்திரனை சிஏஏ கண்காணிப்பு பணிக்கு நியமித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது….

போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தமிழகஅரசு அவரை பணி நியமனம் செய்து இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது…

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: anti-CAA/NRC/NPR protests, CAA, Sterlite gunshot, சிஏஏ போராட்டம், டிஜிபி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தலைமை செயலகத்தில் பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்
-=-