காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபி சஞ்சீவ்குமார் மரணம்

சென்னை:

மிழக காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய சஞ்சீவ் குமார் இன்று காலமானார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சஞ்சீவ்குமார், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உட்பட அதிகாரிகளும், காவலர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் திருவல்லிக்கேணி ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை பெசன்ட் நகர் மயானத்தில் இறுத்திச் சடங்கு நடைபெற இருக்கிறது.