சென்னை:

மிழக டிஜிபி திரிபாதியின் தமிழ்ப்பற்று தொடர்பான அறிக்கைக்கு, திமுக தலைவர் முதலில் பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ள நிலையில், பாமக தலைவர் ராமதாஸ், தான்தான் முதலில் டிஜிபியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தது போல, பொய்யான  தகவல் வெளியிட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

தமிழக டிஜிபி திரிபாதி,  காவல்துறை தகவல்கள், கடிதப் பரிமாற்றம், அரசு முத்திரை, பெயர்ப் பலகை, கையொப்பம் என அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 25ந்தேதி உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டார்.

வடமாநிலத்தை சேர்ந்த டிஜிபி திரிபாதியின் தமிழ்ப்பற்று தமிழகமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், டிஜிபியின் திரிபாதியின் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  November 25th  6:53pm டிவிட் பதிவிட்டிருந்தார்.  

ஸ்டாலின் டிவிட்டைத் தொடர்ந்து டிஜிபியின் தமிழ்ப்பெற்று குறித்த அறிவிப்பு வைரலானது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட சமூக ஊடகங்களிலும் பெருத்த வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், பாமக தலைவர், டாக்டர் ராமதாஸ், தான்தான் டிஜிபியி திரிபாரியின் தமிழ் குறித்த அறிவிப்பா னைக்கு முதன்முதலாக வரவேற்பு தெரிவித்தது போல  பொய் கூறி உள்ளார்.

டாக்டர் ராமதாஸ், டிஜிபியின் அறிவிப்பானைக்கு அடுத்த நாளான (November 26th 10:22am)  26ந்தேதி அன்று காலைதான் பதிவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடிதத் தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்…. கனிவு பெருகட்டும்!  என்று டிவிட் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனது பதிவிட்டுக்கு, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருப்பதாக ஒரு கடிதத்தின் நகல் ஒன்றையும் பதிவேற்றி உள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட கடிதம்

அந்த கடிதத்தில், டாக்டர் ராமதாஸை புகழ்ந்தும், ராமதாஸ் கட்சியா நடத்துகிறீர்கள், பல்கலைக்கழகத்தையா நடதுகிறீர்கள் என்று புகழ்ந்து கூறப்பட்டு உள்ளது.

பாமகத் தலைவர் ராமதாசின் இந்த பொய்த் தகவல்கள் அவரது கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையே யும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.