இன்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு  காலா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை  படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படம் காலா. இதன் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது.

மும்பையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில், ரஜினி தாதா வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி  பெரும் வரவேற்பைப் பெற்றது.

வயதான தோற்றத்தில், தாதா போன்று காட்சியளிக்கும் அந்தப் போஸ்டரில் கரிகாலன் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், தமிழர் ஒருவரின் நிஜக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவதாக தகவல் பரவியது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.