விஜய் சேதுபதி படத்தில் சாய் தன்ஷிகா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை சாய் தன்ஷிகா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dhanshika, Laabam, Shruti Haasan, SP Jananathan, vijay sethupathi!
-=-