‘அல வைகுந்த புரமுலோ’ தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. புட்டபொம்மா பாடலுக்கு நடனத்தில் இடுப்பை அசைத்து ஆடி இளவட்டங்களை கவர்ச்சியில் கவர்ந்தார். சமீபத்தில் சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பகிர்ந்து சமந்தா ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார். பிறகு யாரோ இன்ஸ்டா கிராமை ஹேக் செய்து மெசேஜ் போட்டிருப்பதாக கூறி சமாளித்தார்.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் பூஜா யோக பயிற்சியை தீவிரமாக செய்து உடலில் வெயிட் போடாமல் பார்த்துக்கொள் கிறார். தனுராஷ்னா எனபடும் உடலை வில் போல் வளைத்து செய்யும் கடின மான யோகாசனம் செய்து அப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அதில்,’ஒரு நல்ல யோகா வகுப்பிற்குப் பிறகு அந்த மகிழ்ச்சியான சோர்வு … வியர்வை ஆனாலும் மகிழ்ச்சி’ என பதிவிட்டிருக்கிறார்.
பூஜா ஹெடே அடுத்து பாகுபலி பிரபாஸின் நடிக்கும் 20வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார். பிரபாஸ் படம் தமிழிலும் வெளிவரவுள்ளதால் தமிழ் அதன் மூலம் தமிழ் படங்களுக்கும் குறி வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.