இணையத்தில் வைரலாகும் தனுஷின் 6 பேக் உடற்பயிற்சி வீடியோ……!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் 6 பேக்குடன் சண்டையிடுவார். படம் வெளியானபோது பலரும் அது கிராஃபிக்ஸ் என்று குறிப்பிட்டனர்.

ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்புத் தளங்களில் தனுஷ் நடனமாடும் காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். ‘மாரி 2’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின்போது, 6 பேக்கிற்காக தனுஷ் தயாராகும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.