அருண் மாதேஸ்வரன் இயக்கம் புதிய படத்தில் தனுஷ்….!

‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ படங்களைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள புதிய படத்தில் தனுஷை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் – அருண் மாதேஸ்வரன் நட்பை வைத்து இந்தப் படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது ஆரம்பக்கட்ட நிலையில்தான் இதற்கான பேச்சுவார்த்தை உள்ளது.

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தைத் தயாரிக்க சத்யஜோதி நிறுவனம் முன்வந்துள்ளது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.