டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள தனுஷ்……!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ இந்திப் படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்து வருகிறார்.

அத்ரங்கி ரே’ படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

வாரணாசியில் சில முக்கிய இடங்களில் அத்ரங்கி ரே ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. மதுரையில் நடைபெற்று வந்த ஷுட்டிங்கை தொடர்ந்து டெல்லியில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில் டெல்லியில் நடக்கும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். இந்த பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.