சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் D43 .

இன்று பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

இன்று முதல் நாள் ஷூட்டிங்கில் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்ற ருசிகர தகவலையும் பகிர்ந்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கிறார் .