ரசிகர்களோடு ஆடிப்பாடி பேட்ட படம் பார்த்த தனுஷ்

சென்னை

ன்று வெளியாகி உள்ள பேட்ட படத்தை திரையரங்கி8ல் ரசிகர்களுடன் ஆடிப்பாடி ரசித்து நடிகர் தனுஷ் பார்த்துள்ளார்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம் பேட்ட.    இன்று வெளியான அந்தப் படத்தை காண பல ரசிகர்கள் முண்டியடித்து சென்றுள்ளனர்.   அது மட்டுமின்ற் திரையுலகப் பிரபலங்களும்  அப்படத்தை கண்டு களித்துள்ளனர்.

ரஜினிகாந்த் முதல் மருமகனும் பிரபல நடிகருமான தனுஷ் இன்று சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்துள்ளார்.  அவருட்ன் லத ரஜினிகாந்த், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தை கண்டு களித்துள்ளனர்.

இந்த படத்தில் ரஜினியின் ஸ்டைல் நடிப்பால் பல ரசிகர்கள் எழுந்து ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர்.  தனுஷும் அவர்களில் ஒருவராக ஆடிப்பாடி இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார்.