Random image

கேக் வெட்ட பித்தளை வாளுடன் வந்த தனுஷ் ரசிகர் கைது…!

தனுஷ் நடிக்கும் 40-வது திரைப்படமான ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது.

இதில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள போவதாக கூறப்பட்ட நிலையில் , தனுஷ் ரசிகர்கள் கூட்டம் குவிய தொடங்கினர்.

தனுஷுக்காக வெகு நேரம் காத்திருந்த ரசிகர்கள் ,அவர்களே கேக் வெட்டி விழாவை நடத்த ஆரம்பித்தனர். அப்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுள்ளான் செந்தில் என்பவர் கேக் வெட்ட பித்தளை வாள் வைத்திருந்தார். இதை கண்ட பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அந்த இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.