வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் . இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார் .

பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், அசுரன் படம் ரிலீஸை கொண்டாட தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக திருநங்கைகளுக்கு இலவசமாக தையல் மிஷின் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.