தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் எஸ் ஜே சூர்யா

சென்னை

பிரபல கதாநாயகரான தனுஷ் பவர் பாண்டி என்னும் படத்தை முதன் முதலாக இயக்கினார்.  அந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் ரேவதி உள்ளிட்டோர் நடித்தனர்.   அந்த படத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   தற்பொது ஒரு புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்க உள்ளார்.

இந்த புதிய படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.   மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த பட்த்தில் நடிக்க உள்ளனர்.   இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.   இந்த்ப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை திரைப்படம் ஆயுதபூஜை தினமான வரும் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.   அதைத் தொடந்து தீபாவளி அன்று கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா வெளிவர உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dhanush is directing second movie in which SJ Surya is acting
-=-