வெற்றிமாறனுடன் மீண்டும்  இணையும் தனுஷ்..

இயக்குநர் வெற்றிமாறன் –நடிகர் தனுஷ் கூட்டணி கோடம்பாக்கத்தில் வெற்றிக்கூட்டணியாக கருதப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான ‘பொல்லாதவன்’’ படத்தில், தனுஷ், கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்த படம் சூப்பர் ஹிட்.

பின்னர் இந்த ‘ராசியான ‘’ கூட்டணி சேர்ந்து வழங்கிய ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களும் வெற்றி பெற்றன.

’’வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்போம்’’ என இருவரும் அறிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக அவர்கள் இன்னொரு புதிய படத்தில் இணைய உள்ளனர்.

இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

தனுஷ் கைவசம் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன், அட்ராங்கி ரே ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

-பா.பாரதி.