சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் ‘மாரி’ பட பாடல்….!

--

2015 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் மாரி.

அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பேசப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் தீம் சாங்கான தர லோக்கல் பாடலை பிரிட்டனில் நடந்த சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் காட் டேலன்ட் என்ற நடன ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

இதில் மும்பையைச் சேர்ந்த X1X என்ற நடனக் குழுவினரும் பங்கேற்றனர். தனுஷ் எழுதி பாடிய இந்த தரலோக்கல் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி கலக்கியுள்ளனர்.

https://twitter.com/directormbalaji/status/1307625648777822208

இந்த வீடியோவை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.