வைரலாகும் தனுஷ் நடித்து பாதியில் நின்று போன ‘திருடன் போலீஸ்’ படத்தின் போஸ்டர்….!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துரை செந்தில் குமார் இயக்கிய ‘பட்டாஸ்’.

இதையடுத்து ‘ஜகமே தந்திரம்’, மற்றும் ‘கர்ணன்’ இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் .

சூழ்நிலை இப்படி இருக்க திடீரென தற்போது நடிகர் தனுஷ் நடித்து பாதியில் நின்று போன ‘திருடன் போலீஸ்’ படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது….

இந்த படத்தை அறிமுக இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான அரவிந்த் கிருஷ்ணா இயக்கினார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுத, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.