எனை நோக்கி பாயும் தோட்டா தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்து பட்டாஸ் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் 3 படப்பிடிப்பு லண்டனை களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ல‌ட்சுமி நடிக்கிறார்.

இதற்காக தனுஷ் புதுலுக்கில் உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.