ரஜினிபோல் காமெடி வேடத்தில் நடிக்க ஆசைப்படும் தனுஷ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்ரோஷ மான வேடங்களிலேயே நடித்து வந்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு கெமேடி வேடங் களை ஏற்று நடிக்க தொடங்கினார். அந்த பாணியை தற்போது தனுஷ் கையிலெடுக் கிறார்.


ஆடுகளம் தொடங்கி சமீபத்தில் வெளி யான பட்டாஸ், அசுரன் என பெரும்பா லான படங்களில் கடினமாக கதாபாத்திரங் களையே ஏற்று நடித்து வந்தார் தனுஷ். தற்போது நடிக்கும் ஜகமே தந்திரம், கர்ணன் அடுத்து நடிக்கும் கார்த்திக் நரேன் இயக்கும் பெயரிடப்படாத படம் போன்றவையும் சமூக பிரச்னைகளை அலசும் படமாகவே கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு படத்தில் நடிக்க எண்ணியிருந்த தனுஷ், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம், இவர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் . அதுவும் காமெடி களத்துடன் தனக்காக ஸ்கிரிப்ட் தயாரிக்கும்படி தனுசே இயக்குனரிடம் கேட்டாராம்.

You may have missed