தனுஷின் ’ ரகிட ரகிட ரகிட..’ விருந்து ’ஜெகமே தந்திரம்’ இயக்குனர் புதிய அப்டேட்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இதன் முக்கிய அப்டேட் இன்று வெளி யிடப்படும் என்று நேற்று அறிவிக்கப் பட்டது. தனுஷ் பிறந்த தினம் இம்மாதம் ஜூலை 28 ம் தேதி என்பதால் அதை யொட்டிய அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற் கேற்ப அறிவிப்பும் அமைந்திருகிறது.


’ஜெகமே தந்திரம்’ படத்திலிருந்து ’ரகிட ரகிட ரகிட’ என்ற பாடல் தனுஷ் பிறந்த தினமான 28 தேதி ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகும் என்று கூறப் பட்டிருக்கிறது. இந்த தகவலை ரசிகர் நெட்டில் பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத் துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப் பதிவு செய்கிறார். கடந்த மே மாதமே ஜெகமே தந்திரம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.