ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு ‘வால் நட்சத்திரம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தையும் சத்யஜோதி நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது. தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.

முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் உருவாகும் படம் என்பதால், அனைத்தையும் திட்டமிட்டுவிட்டு, பின்பு படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு திட்டமிட்டுள்ளது.