விஷாலுக்கு குரல் கொடுக்கும் தனுஷ்!

 

விவாகரம் ஏதும் இல்லை.. நல்ல விஷயம்தான். விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் தனுஷ் ஒரு குத்துப்பாட்டு பாட இருக்கிறார்  தனுஷ். அதான் மேட்டர்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான படம் சண்டக்கோழி. தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தையும் இயக்குனர் லிங்குசாமியே இயக்கி வருகிறார். இதில், விஷால், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் உட்பட பலர் நடிக்கின்றனர். விஷாலே, தனது ஃபிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறார்.  இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், விஷாலுக்காக ஒரு குத்துப்பாட்டு பாட இருக்கிறார் தனுஷ்.

கொசுறு தகவல்:  இப்படத்திற்கு முன்னதாக விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் “இரும்பு திரை” படம், வரும் பொங்கலன்று வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.