வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது ‘அசுரன்’. வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் பேசிய தனுஷ் வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது.

வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். மக்கள் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

விருது கிடைக்கலன்னு துடிச்சது கிடையாது. ஆனாலும் எங்களிடம் சில வருத்தங்கள் இருக்கு ஆனால் எங்களுக்காக வருத்தப்படவில்லை. இப்படத்திற்காக உழைத்த ஜாக்சனுக்காக, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜிற்காக, ராட்சசன் ராமிற்காக, மேற்குத்தொடர்ச்சி மலை லெனின் பாரதிக்காகதான் நங்கள் வருத்தப்பட்டோம்.

இதைபற்றியெல்லாம் வெற்றிமாறன் பேசவேண்டாம் என்றார். ஆனால் பரவாயில்லை நீங்கள் தானே. உங்களிடம் தானே சொல்கிறேன். நான் எதையும் மனதில் வைத்துக்கொள்வதில்லை” என்றார் தனுஷ் .