தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்  அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் தனுஷின் ஆக்ரோஷமான படத்தை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான படம் வடசென்னை. இந்த படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில்  அசுரன் படத்தில் தனுஷ் நடித்துவருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ள நிலையில், நேற்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தை  கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தில் தனுசுக்கு  ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Asuran FIRST LOOK, Dhanush, gvprakash, Manju Warrier, Vcreations, VetriMaaran, அசுரன், தனுஷ், மஞ்சு வாரியார், வெற்றி மாறன்
-=-