17 வருடம் காதல் கொண்டேன் கொண்டாட்டம்.. செல்வராகவனுக்கு நன்றி சொன்ன தனுஷ்..

--

டிகர் தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்த முதல் படம் துள்ளுவதோ இளமை. இதனை அவரது தந்தை கஸ்தூரிராஜா இயக்கினார். தனுஷின் 2வது படத்தை நாயகனாக வைத்து தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கினார். இதில் சோனிய அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படம் வெற்றிபெற்று திரையுலகில் தனுஷ் ஹீரோவாக தனக் கென ஒரு இடம் பிடிக்க காரணமாக அமைந்தது.


காதல் கொண்டேன் படம் வெளியாகி 17 வருடம் ஆகிறது, அதை தனது டிவிட்டரில் நினைவு கூர்ந்திருக்கும் தனுஷ்,’ செல்வரா கவன் எப்போதுமே கிரேட். அவருக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாகவும் கடன்பட்டவனாகவும் நான் இருக்கிறேன்’ என உணர்ச்சி பெருக்குடன் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ’காதல்கொண்டேன்’ பட புகைப்படத்தையும் தனுஷ் வெளியிட்டி ருக்கிறார்.

#Kadhal Kondein completes 17 years

You may have missed