அவென்ஜர்ஸ் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் இணையும் தனுஷ் !

நடிகர் தனுஷ். தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர்கள் அந்தோனி மற்றும் ஜோ இருவரும் சேர்ந்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

தி க்ரே மேன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் கேப்டன் அமெரிக்கா-வாக நடித்த க்றிஸ் ஈவான்ஸும், லா லா லேண்ட், ஃபர்ஸ்ட் மேன் ஆகிய படங்களின் நாயகன் ரயன் காஸ்லிங்கும் இதில் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை டெட்லைன் என்கிற பிரபலமான ஹாலிவுட் செய்தி இணையதளம் பகிர்ந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தரப்பும் இதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.