51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ மற்றும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில், தான் நடித்த ‘அசுரன்’ படம் தேர்வாகி இருப்பது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில்:

“IFFI 2020 இந்தியப் பிரிவில் ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற எங்கள் அனைவருக்கும் இது ஒரு கவுரவம். மக்களுக்கான ஒரு படத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றி”.

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.