தனுஷ் அறிவிக்கப்போகும் முக்கிய அறிவிப்பு இதுவா?

dhanush1

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். தற்போது தான் தயாரிக்கும் 4வது படத்தின் அறிவிப்பை வரும் 9ஆம் தேதி (09/11/15) அறிவிக்கவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதை கண்ட சிலர் அது என்ன அறிவிப்பு என தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டு தனுஷின் நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சி தந்துள்ளது அது என்ன செய்தி என்றால், தனுஷ் தயாரிக்கவுள்ள படத்தின் ஹீரோ நடிகர் விஜய் தானாம்.

dhanush

நடிகர் விஜய்யை சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் செல்வராகவன் அவர்கள் சந்தித்து கதை சொல்லியுள்ளாராம், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த தனுஷ் நான் அந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கின்றேன் என கூறியுள்ளாராம் அதற்கு விஜய்யும் ஒகே சொல்லியுள்ளாராம்.

இந்த அறிப்பை அதிகாரப்பூர்வமாக‌ தனுஷ் வரும் 9ஆம் தேதி கூறவுள்ளதாக கூறப்படுகின்றது. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் நடந்தால் தனுஷுக்கு அடிச்சதுடா லாட்டரி என்று கண்டிப்பாக‌ புலம்பும் கோலிவுட்.

தனுஷ் கூடிய விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்தும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடதக்கது.