கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.

மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.

நாட்டு மக்கள் அனைவருமே மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தனுஷ் வீடியோ பதிவொன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தக ஊழியர்கள் என அனைவரும் அவர்களது உயிரை மட்டும் பணயம் வைத்துப் போராடவில்லை. அவர்கள் குடும்பத்தினர் உயிரையும் பணயம் வைத்துப் போராடுகிறார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது, செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். வீட்டில் இருப்போம். அவ்வளவுதான். கண்டிப்பாக முடிந்தவரை செய்ய வேண்டும். என கேட்டுக்கொண்டுள்ளார் .