ஏழுமலையானை தரிசித்த தனுஷ்….!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ் .

அதை தொடர்ந்து பாலிவுட் படமான அந்தராங்கி ரே படப்பிடிப்பில் உள்ளார். இப்படம் முடிந்தவுடன் அவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று தனது மனைவி மற்றும் அண்ணன் செல்வராகவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். தனுஷின் வருகையறிந்த பொதுமக்கள் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொண்டனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.