“விஐபி 2” படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றார்கள். அப்போது தனுஷ் டிவி 9 என்ற தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார்.

ஆரம்பத்தில் பேட்டி நன்றாகத்தான் போனது. அப்புறம்தான் விவகாரமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. சுசீ லீக்ஸ்.. நினைவிருக்கிறது அல்லவா.. அப்போது தனுஷின் ஏடாகூட புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த விவகாரம் குறித்து, தனுஷிடம் கேட்கப்பட்டது. தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியிடையே பிரச்சனையாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக கிசுகிசு உலவுகிறது.

இது குறித்தும் தனுஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதனால் தனுஷ் டென்ஷனாகிவிட்டார். “அந்த இரு பிரச்சினை குறித்து முட்டாள்தனமாக கேட்காதீர்கள்” என்று கூறி, பேட்டியில் இருந்து பாதியில் சென்றுவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.