காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதையின் நாயகனாகவும், பல்வேறு படங்களில் காமெடியனாகவும் நடித்து வருபவர் யோகி பாபு.

பிப்ரவரி 5-ம் தேதி திடீரென திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு. மஞ்சு பார்கவியுடன் நடந்த திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே வெளியிட்டார் .

திருமணம் முடிந்த கையேடு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தில் நடிக்க திருநெல்வேலிக்குச் சென்றார்.

படக்குழுவினர் கேக் வெட்டி யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். படத்தின் நாயகன் தனுஷ், திருமணப் பரிசாக யோகி பாபுவுக்கு தங்கச் செயின் ஒன்றை அணிவித்துள்ளார். தனுஷின் இந்தச் செயலால் மிகவும் நெகிழ்ந்துவிட்டார் யோகி பாபு.