’மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மணம் உண்டு’’ என்றார் அறிஞர் அண்ணா.
சினிமாத்துறையை பொறுத்த வரை –அங்குள்ள தோட்டத்து மல்லிகையின் மணம் எப்போதுமே கமகம ரகம்.
கமலஹாசனின் ‘பாபநாசம்’ லேட்டஸ்ட் உதாரணம்.(அதன் ஒரிஜினல்- திரிஷ்யம்)

மலையாளத்தில் அண்மையில் வெளிவந்து பெரும் ‘ஹிட்’ அடித்த படம்- ‘அய்யப்பனும்,கோஷியும்’.
அய்யப்பன் என்ற காவல் துறை அதிகாரிக்கும், கோஷி என்ற ரிடையர்டு ராணுவ அலுவலருக்கும் இடையே நடக்கும் மோதலே கதை.
அய்யப்பனாக பிஜு மேனனும்.கோஷியாக பிரித்விராஜும் நடித்து இருந்தனர்.
இந்த படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளார், கதிரேசன் என்ற தயாரிப்பாளர். அவர் தனுஷ் நடித்து ஏகப்பட்ட விருதுகளை அள்ளிய ஆடுகளம் படத்தை தயாரித்தவர்.

’அய்யப்பனும், கோஷியும்’ மலையாள படத்தின் ரீ.மேக்கில் தனுஷ் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளப்படத்தை சச்சி இயக்கி இருந்தார்.

தமிழ் படத்தை யார் இயக்கப்போகிறார் என்று தெரியவில்லை.
தனுஷ், நடித்து கடைசியாக ‘பட்டாஸ்’ படம் ரிலீஸ் ஆனது. தமிழ் புத்தாண்டுக்கு ‘ஜெகமே மந்திரம்’ வெளிவர உள்ளது.