தனுஷ் வழக்கு: பண பலம் ஜெயித்துவிட்டது! கதிரேசன் தம்பதி கண்ணீர் பேட்டி

மதுரை,

னுஷ் தங்கள் மகன்தான் என்று வழக்கு தொடர்ந்த மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், பண பலம் ஜெயித்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.

மதுரை அருகே உள்ள மேலுார்  பகுதியை சேர்ந்த  கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று  மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டு கிளை யில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

கதிரேசன் தம்பதியினர் தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.என். பிரகாஷ் தள்ளுபடி செய்தார்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான கதிரேசன் தம்பதியினர்,

தனுஷ் தங்களது மகன்தான் என்பது தனுஷின் மனசாட்சிக்கு தெரியும்  என்று கண்ணீர் மல்க கூறினர்.

மேலும், நாங்கள் டிஎன்ஏ சோதனை கேட்டிருந்தோம். அதை மதுரை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வில்லைஎன்றும், தனுஷ் பிறப்பு குறித்து போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டு என்றும் குற்றம் சாட்டினர்.

மேலும், வழக்கை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், தற்போது பண பலம் ஜெயித்து விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினர்.