தனுஷ் பெரிய திரையில் தான் ரகிட ரகிட ஆடப்போறார்….!

‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த ‘ஜகமே தந்திரம்’ படம்.

மே 1ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டது படக்குழு.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷுடன் ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜொஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை Ynot Studio நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜகமே தந்திரம் OTT-ல் வெளியாகலாம் என தகவல் பரவிய வண்ணம் உள்ளது .

https://twitter.com/sash041075/status/1298550039086641153

தற்போது படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், ”ஜகம் இன்னும் தயாராகி கொண்டுதான் இருக்கிறது. இன்னும் நார்மல் ஆகவில்லை. அதனால், தியேட்டர்கள் திறக்கும் வரை, பொறுமையாக காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள். எங்கள் மொத்த படக்குழுவும், தனுஷ் பெரிய ஸ்க்ரீனில் ரகிட ரகிட ஆடுவதையே விரும்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.