தனுஷ் பட இயக்குநருக்கு கொரோனா தொற்று….!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது பாலிவுட்டில் அத்ரங்கி ரே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது Quarantine-ல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.