அக்டோபர் 17ல் வெளியாகிறது தனுஷின் ‘வடசென்னை’

னுஷ் மிகவும் எதிர்பார்க்கும் படமான வடசென்னை வரும் அக்டோபர் மாதம் 17ந்தேதி வெளியாகும் என்று தனது டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்த படத்தை பிரபல வெற்றிப்பட இயக்குனர்  வெற்றிமாறன் இயக்குகிறார். மேலும்,  இப்படத்தில்அமீர், சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார்.  படத்தின் வெளியிடும் உரிமையை  லைகா பெற்றுள்ளது.

தற்போது இந்த படம்  வருகிற அக்டோபர் 17ந் தேதி வெளிவருகிறது. இதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தனுசும் டிவிட்டர் பதிவு மூலம் இதை உறுதிப்படுத்தி உள்ளார். தனுஷின் டிவிட்டர் பதிவில், விதியின் மகன்; பேட்டை இளவரசன்.. வருகிறான் அக்டோபர் 17ல் என்று பதிவிட்டு உள்ளார்.

சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தின் டீசர் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை வெளியாகும் நாளை  ரசிகர்கள் ஆவலோடு எதிர்த்து உள்ளனர்.

தனுஷ் நடிக்கும்  வட சென்னை படம்,  வட சென்னை பின்னணியில் உருவாகி உள்ள தாதாயிசம் குறித்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.