‘மாரி-2’ படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் ‘100 மில்லியன் ஹிட்ஸை’ கடந்து சாதனை

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல், யு டியூப்பில்10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

தனுஷ் நடித்த மாரி படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாரி-2 படம் தயாரிக்கப்பட்டது. மாரி படக்குழுவே மாரி-2 படத்தையும் தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தில், தனுசுக்கு ஜோடி யாக பிரேமம் பட நாயகி சாய்பல்லவி நடித்துள்ளார்.

மாரி-2 படத்தில்,  தனுஷ் சாய் பல்லவி நடனத்தில், யுவன் ஷங்கர் ராஜா  இசையில் ரவுடி பேபி பாடல் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது யூ டியூப்பில் 10 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. படம் வெளியான 18 நாட்களில் 10 கோடி ரசிகர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே கொலைவெறி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தனுஷ் தற்போது ரவுடி பேபி மூலம் மீண்டும் உச்சிக்கு சென்றுள்ளார். தற்போது இணையதளத்தில்  100 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

ரவுடிபேபி வீடியோ சாங்….

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: '100 மில்லியன் ஹிட்ஸ், 'மாரி-2', 'மாரி-2' படம், 'ரவுடி பேபி', 'ரவுடி பேபி' பாடல், 100 million hits, Dhdanush's Rowdy Baby'  song, Mari-2, Mari-2' movie, Rowdy Baby song, Rowdy Baby', உலக சாதனை, தனுஷ் மாரி-2
-=-