டிகர் தனுஷ் நடித்துள்ள விஐபி படத்தின் இரண்டாம் பாகமான விஐபி-2 அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி-2 படத்தின் தயாரிப்பாளரான சவுந்தர்யா ரஜினிகாந்த் இதை அறிவித்து உள்ளார்.

நடிகர்  தனுஷ் நடித்துள்ள படம்  ‘வேலையில்லா பட்டதாரி 2’. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று   இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் – அமலா பால் ஆகியோரை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’.

இந்தப் படம் 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கஜோல், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்டு மாதம் வெளியாகிறது.