கதைசொல்லியை பத்திரிக்கையுலகம் கொண்டாடும் – தன்யா பேட்டி பாகம்- II

தன்யா ராஜேந்திரன்

தன்யா ராஜேந்திரன், தற்பொழுது தி நியூஸ் மினுட் எனும் இணையதளப் பத்திரிக்கையின் தலைமைப் பதிப்பாசிரியர். சென்னையில் உள்ள ஆசியப் பத்திரிக்கையாளர் கல்லூரியின் பட்டதாரியான இவர், எட்டு ஆண்டுகள் டைம்ஸ் நவ் செய்தித்தொலைக்காட்சியில் பணியாற்றி தென் மாநிலச் செய்திகளின் பொருப்பாளராய் இருந்தவர். இவரின் திறமையான செய்திச் சேகரிப்பால் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குறித்த செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதோடல்லாமல், இந்தியாவின் உயர்ந்த புலனாய்வுத் துறையான சி.பி.ஐ-யின் விசாரணைக்கும் வித்திட்டது. தம்முடைய மிகுந்த வேலைப்பளுவிற்கிடையே நம்முடைய கேள்விகளுக்கு தன்யா பதில் அளித்துள்ளார்.

அவரது பேட்டியின் முதல் பகுதி ஏற்கனவே வெளியிடப் பட்டிருந்தது . இங்கே காண்க 

வாருங்கள் அவரது பேட்டியின் இரண்டாம்  பாகத்தைப் காண்போம். ..

  1. “நடுநிலைமை” என்று ஒன்று இருக்க முடியாது. நடுநிலைமை என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளி இருவருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப் படுவது குறித்து தங்கள் கருத்து என்ன?

பத்திரிகைத்துறையின் அடிப்படைக் கொள்கை என்பது செய்தியின் இருபக்கத்து கதையையும் மக்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டியது அவசியம். ஆனால் அவ்வாறு நாம் செய்யும் போது, எந்த ஒரு குற்றவாளியும் தன்னுடைய பாவங்களை மூடிமறைக்க ஒரு இலவச மேடையாய் நம்மை பயன்படுத்த விடக்கூடாது.  ஒரு பத்திரிகையாளர், செய்தியின் உண்மையை அறிய  தொடர் முயற்சி மேற்கொண்டு சூழ்ச்சிகளுக்கு இரையாகிவிடாமல் உண்மையினை வெளிக்கொணர போதுமான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

 

  1. “24×7 சேனல்கள் மற்றும் இணைய இதழ்கள் அவசியம் இல்லை .அவர்களால் தான் உதவாத சம்பவங்கள் உயர்த்தி செய்தியாக மாற்றம் பெறுகின்றன ” என்று ஒரு பிரபலமான கருத்து நிலவுகின்றது. உங்கள் கருத்து?

எனக்கும் இது மிகப்பெரியச் சவாலாக உள்ளது. மக்களுக்கு தேவையான செய்தி எது என்று தரம் பிரிப்பதில் மிகுந்த குழப்பம் நீடிக்கின்றது. என்ன தான் மக்கள் இந்தச் செய்தியை ஏன் பிரசுரிக்கின்றீர்கள் என்று வினவினாலும், பொழுதுபோக்கு தகவல்கலைத்தான் அதிகமாக சொடுக்கி விரும்பிப் படிகின்றனர்.

செய்தி சுழற்சியைப் பொறுத்தமட்டில், கண்டிப்பாக செய்தி சேனல்கள் ஒரு நாள் முழுவதும் 4 அல்லது 5 செய்தித் தலைப்புகளையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாமல், புதிய புதிய வடிவங்களை யோசித்து மாற்றமடைய வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர்  சேற்றை வாரி இரைப்பதையே ஒளிபரப்பாமல், நிஜமான மக்கள் பிரச்சினைகளில் நிறைய கவனம் செலுத்த வேண்டும்.

என் கணிப்பில், செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. நாம்  இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதிக ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

  1. தொலைக்காட்சி ஊடகம் அச்சு ஊடகங்கள் விட மேன்மையானதா ?

மேன்மையானது என்பது சரியான வார்த்தையாக இங்கே பயன்படுத்த முடியாது. விரைவானது என்பதே சரியானதாக இருக்கும். தொலைக்காட்சி சேனல்கள் அச்சு ஊடகங்களைவிட வேகமாகவும், உடனடியாகவும் இருக்கின்றன.

மக்களுக்கு விரைவாக தகவல் தேவைப்படும் போது தொலைக்காட்சி சானல்கள் பார்க்கின்றனர். எனினும், விரிவான செய்திக்கு, மறுதினம் ழுந்தவுடன், செய்தித் தாளைத் தான் கையில் எடுக்கின்றனர்.  ஆனால் இந்நாட்களில் செய்தித்தாள் செய்தியின் தரமும் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏனெனில், இன்றையக் காலக்கட்டத்தில்,  செய்திச் தொலைக்காட்சி சேனல்களின் வேகத்தை விட சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் விரைவாகச் செய்திகளைத் தந்து செய்தித் தரத்திற்கு சவால் விடுக்கின்றன.  ஒரு ட்வீட் அல்லது ஒரு பேஸ்புக் நிலைத்தகவல் மூலமாய் வேகமாக தொலைக்காட்சியைவிட செய்தி பகிரப் படுகின்றது. இந்தப் ஊடகங்களுக்கிடையிலான போட்டியின் இறுதியில், பத்திரிகைத்துறையே வெற்றியாளராய் இருக்க முடியும்.

 

  1. தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் சிகப்பாகவே  உள்ளனர் அல்லது  அவ்வாறு காண்பிக்கப் படுகின்றனர். “கருப்பு அசிங்கமானது” எனும் கருத்து  பத்திரிக்கை உலகில் எந்த அளவு பின்பற்றப்படுவதாக நினைக்கின்றீர்கள். இது குறித்த தங்களின் நிலைப்பாடு என்ன?

இந்த கண்டிப்பாக தீர்க்கப் படவேண்டிய பிரச்சனை. ஒரு செய்தி தொகுப்பாளருக்கு அழகு அவசியமற்றது. இந்தப்  பிரச்சனை  எப்படி ஆரம்பமானது என்றால், செய்திகளை அறிவிக்க ஒருவர் பத்திரிகையாளர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும், பார்ப்பதற்கு அழகாகவும், சிலசமயங்களில் அவர்களின் சிறந்த பாவானைகளுமே போதும் என சேனல்கள் முடிவெடுத்ததே காரணம். இது ஒரு மோசமான முன்னுதாரணம். இது களையப் படவேண்டும். இந்து குறுகிய வரையறுக்கப்பட்ட தேவைகளுக்குள்ளும், இந்த “சிகப்பு தான் அழகு என்கிற நுகர்வுக் கலாச்சார எண்ணம் மேலோங்கியுள்ளது. தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை கருப்பான பெண் அறிவிப்பாளர்களை நாம் பார்த்திருக்கின்றோம்? அப்படியே, அந்த கருப்பான பெண்கள் அறிவிப்பாளர்களில், எத்தனை பேரை அவர்களின் நிஜத்தோல் நிறத்தை காட்ட அனுமதிக்கப்படுகின்றனர்?

ஒருப் பக்கம் சிகப்பழகு கிரீம்களுக்காக விளம்பரங்களில் தோன்றும் நடிகரை கடுமையாக விமர்சிக்கும் அதே ஊடகங்கள், இந்த பிற்போக்குத்தனமான  கொடுமைகளை பின்பற்றக்கூடாது. இந்த எண்ணங்களை மாற்றிக்கொண்டு கருப்புக்கு உள்ள தடைகளை உடைக்க வேண்டும்.   இங்கு அம்பலப்பட்டு நிற்கும் சேனல்களின் பாசாங்குத்தனத்தை அவர்கள் உணர்ந்து, திருந்தி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

10 எதிர்கால லட்சியம்…….

நான் தி-நியூஸ்-மினிட் தளத்தின் தரத்தை, இந்த  ஒரு குடையின் கீழ், தென் இந்தியாவின் முக்கியச் செய்திகள், மற்றும் சம்மந்தப் பட்ட கருத்துக்களின் சங்கமம் ஆக்க உறுதிபூண்டுள்ளேன். தென்னகத்தின் ஐந்து மாநிலங்களில் இருந்து ஒரு மிகப் பெரிய பார்வையாளர்களின் எண்ணிக்கையும், வாசகர்கள் இருந்தபோதும்,  தில்லி மற்றும் மும்பையை அடிப்படையாய் கொண்டு இயங்கும்  தேசியச் செய்தியறைகள், தென் இந்தியாவிலிருந்து வரும் செய்திகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. நாங்கள் வழக்கமான  அறைத்த மாவையே அறைக்காமல், மக்களைச் சிந்திக்கத் தூண்டும் உள்ளடக்கத்தை மட்டும் கொடுக்க குறிக்கோள் கொண்டுள்ளோம். உதாரணத்திற்கு, ஒவ்வொரு குழந்தையைப் பலவந்தப் படுத்துபவர் குறித்த செய்தி, கையில் மலம் அள்ளுபவர், சாக்கடையில் மரணமடைபவர் குறித்த செய்தி, சாதி ஆணவக் கொலையால்  பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்திகளை மீண்டும் மீண்டும் தருவதன் மூலம், நடுத்தர வர்க்கம் அதனைப்  படித்து புரிந்து  அனுதாபப்பட்டு ஒரு மாற்றம் நிகழும் என்று நாங்கள் நம்புகிறேன்.

  1. பயிற்சி பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைதுறையில் நுழைய விரும்புபவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை அல்லது ஆலோசனைக் குறிப்புகள் என்ன ?

இதழியல் துறை ஒரு  நிலையான வேலைநேரத்தினைக் கொண்ட வழக்கமான அலுவலக வேலையில்லை.  உங்களுக்கு செய்தி குறித்த பேரார்வம், கதை கேட்கும் ஆர்வம், அதனை மற்றவர்களுக்கு சொல்லும் அனுபவம் இருந்தால் மட்டுமே இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க வேண்டும். இந்தத் தொழிலில், நிலையான விடுமுறையோ, வேலை நேரமோ கிடைக்காது.  எனவே, தங்களுக்கு செய்திகள் பரவசமூட்டுபவையாக இருந்தால், அந்த செய்தியின் தாக்கம் உங்களின் நரம்புகளை துடிக்கச்செய்யுமானால், இந்தத் துறை உங்களை கொண்டாடும்.

dhanya raj 3