சென்னை:

பாநாயகர் நோட்டீசுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில்,  தர்மம், நீதி வென்றுள் ளது என்று அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான ரத்தினசபாபதி ஆர்ப்பரித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அதிமுக கொறடா அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர்  நோட்டீசக்கு தடை விதிக்க கோரி, அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒன்றரை நிமிடங்களிலேயே, உத்தரவு பிறப்பித்தது.  அப்போது, சபாநாயகரின் நோட்டீசுக்கு நீதிபதிகள் தடை விதிப்பதாகவும், சபாநாயகர் தனபால் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  அதிருப்தி  எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் தர்மம் வென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

“அரசுக்கும், சபாநாயகருக்கும் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர் கள் நாங்கள். ஆட்சிக்கோ, கட்சிக்கோ எதிராக நாங்கள் செயல்படவில்லை. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று பாடுபட்ட எங்களுக்கான பரிசே சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்” என்று ரத்தின சபாபதி தெரிவித்துள்ளார்.