தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி….!

காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் ஜெயிக்கிற குதிர, 100 % காதல், கொரில்லா, சைத்தான் கா பச்சா, அடங்காதே, நின்று கொல்வான், கோமாளி, ஜடா என்று பல படங்கள் உருவாகி வருகிறது.

தற்போது முத்துக்குமரன் இயக்கத்தில் தர்மபிரபு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் ஜூன் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.